நாயை வைத்து பைக்கில் வித்தை காட்டிய இளைஞருக்கு அபராதம் !

கோலாலம்பூரில் நாயை வைத்து மோட்டார் பைக்கில் வித்தை காட்டிய இளைஞர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாயை வைத்து பைக்கில் வித்தை காட்டிய இளைஞருக்கு அபராதம் !
போக்குவரத்து விதிகளை மிகக் கடுமையாக பின்பற்றி வரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. 

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை அந்நாட்டு போக்குவரத்து காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மோட்டார் பைக்கிலில் நாயை அமர வைத்து தெருவில் வித்தை காட்டிய இளைஞர் ஒருவரது சாகச வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
விதிமுறைகளுக்கு புறம்பான இந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், வாகன எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட மோட்டார் பைக்கின் உரிமையாளரை கண்டறிந்தனர். 

அதனைத் தொடர்ந்து மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாகசத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு 320 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:
Privacy and cookie settings