திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து !

ஜப்பானில் திருடி விட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர். ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், 
திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து !
நகைக் கடைகள், துணிக் கடைகள் போன்ற வர்த்தக நிறுவன ங்களில் பணம் செலுத்தும் நபர்க ளுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும்.

மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக் கையும் வைக்கப் பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வ தற்காக அந்த இடத்தில் வைக்கப் படுவது இல்லை.

பின் எதற்காக அந்த பந்துகள் அங்கு வைக்கப் பட்டுள்ளன?

அந்த பந்துகள் திருட்டைத் தடுப்ப தற்கும் திருடனைப் பிடிப்ப தற்கும் உதவுகி ன்றன. ஆரஞ்சு வண்ண பெயிண் ட்டால் அந்தப் பந்துகள் நிரப்ப ப்பட்டிருக் கின்றன.
திருடி விட்டு தப்பி செல்லும் திருடர்கள் மீது அந்த பந்து வீசப்படுகிறது. 

இதனால் அந்த பந்தினுள் உள்ள பெயிண்ட் அந்த திருடர் மீது பரவி விடுவதால், அந்த நபரை எளிதாக பிடித்து பொலிசில் ஒப்படைக்க முடிகிறது.

எந்தக் கடையில் ஆரஞ்சு பந்து களைப் பார்த் தாலும் அங்கே திருடர்கள் திருட நினைப்ப தில்லை, இதன் மூலம் திருட்டுத் தடுக் கப்பட்டு விடுகிறது என்பது குறிப்பிட த்தக்கது.

ஆரஞ்சு பந்துகள் மூலம் கணிசமான அளவில் திருட்டைக் குறைக்க முடிந்திரு க்கிறது என்று ஜப்பானிய காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.

மேலும், இந்த ஆரஞ்சு வண்ண பந்துகளை எப்படிக் கையாள்வது என்று அங்கே பணிபுரியும் அனைத்து ஊழியர் களுக்கும் பயிற்சி அளிக் கின்றனர்.
ஜப்பானில் சுமார் 8,500 கடைகளில் ஆரஞ்சு பந்துகள் வைக்கப் பட்டிருக்கி ன்றன. ஆண்டுக்கு 1 லட்சம் பந்துகள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன.
வீடியோவுக்கு இங்கு செல்லவும்!
மேலும், இந்த ஆரஞ்சு பந்துகள், கடந்த 20 ஆண்டு களாக ஜப்பானில் திருடர்க ளைப் பிடிக்கும் பணியில் உதவி செய்து வருகின்றன.

தற்போது வங்கிகள், காவல் நிலைய ங்களில் கூட இந்த ஆரஞ்சு வண்ண பந்துகளைப் பயன் படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings