ஆசிரியைக்கு வந்த மொடலிங் ஆசை !

மொடலிங் ஆசையினால் ஏமாந்த பெண்ணின் கதையிது. ஆசிரியையை ஆபாசமாக படம் பிடித்து அந்த புகைப்படத்தை இணையதளத்தில் விடுவதாக மிரட்டி பணம் பறித்த 2 புகைப்படக்காரர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
 
மொடலிங் ஆசையில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பெங்களூருவில் வசித்து வருபவர் 28 வயது பெண். திருமணம் ஆனவர். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு மொடலிங்கில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியை சரத் மற்றும் நவீன் என 2 புகைப்படக்காரர்களை அழைத்து ‘தன்னை விதவிதமாக புகைப்படம் எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து வெவ்வேறு வகையான உடைகளை ஆசிரியை உடுத்தி இருப்பது போன்று நவீனும், சரத்தும் ஆசிரியையை புகைப்படம் எடுத்தனர். மேலும் ஆசிரியைக்கு தெரியாமல் அவர் உடை மாற்றும்போது அவரை ஆபாசமாக புகைப்படக்காரர்கள் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நவீனும், சரத்தும் அந்த ஆபாச படத்தை ஆசிரியையிடம் காண்பித்து ‘இருவருக்கும் அதிகளவு பணம் தர வேண்டும். இல்லையேல் இந்த படத்தை உனது கணவர் மற்றும் உன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களிடம் காண்பிப்பதோடு, இணையதளத்திலும் வெளியிடுவேன்‘ என மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன ஆசிரியை சில முறை நவீன், சரத்துக்கு பணம் கொடுத்து உள்ளார். இருப்பினும் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆசிரியையை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

இதனால் மனம் உடைந்த ஆசிரியை சம்பவம் குறித்து பெங்களூரு வடக்கு மண்டல பொலிசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ஆசிரியை பொலிசில் புகார் செய்து இருப்பதை அறிந்த சரத், நவீன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அவர்களை பொலிசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings