மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை கோட்டார் ரெயில் நிலையம் வந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் ரெயிலை டிரைவர் யார்டுக்கு கொண்டு சென்றார்.
அங்கு ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ஜினுக்கு அடுத்த பொது பெட்டியில் சுத்தம் செய்த போது அங்கு திருநங்கை ஒருவர் அசைவற்ற நிலையில் படுத்து கிடப்பதை கண்டனர்.
உடனே அவர்கள் இது பற்றி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அந்த திருநங்கை இறந்து கிடப்பதை அறிந்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த தகவலை உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர்.
சப்–இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த திருநங்கையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த திருநங்கைக்கு சுமார் 45 வயது இருக்கும். பச்சை நிறத்தில் சேலை கட்டியிருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த ரெயில் நிலையத்தில் அவர் ரெயிலில் ஏறினார்? என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
திருநங்கை இறந்து கிடந்த பெட்டி பொது பெட்டி என்பதால் அவருடன் யாரும் இருந்தார்களா? என்பது பற்றியும் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.