டாஸ்மாக் நாளை விடுமுறை !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகளுக்கு தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில், ‘‘அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings