கேரளாவில் பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை !

1 minute read
கேரளாவில் She taxi வெற்றியைத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப் படவுள்ளது. கேரளாவில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் 
வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் பெண்களுக்கான She taxi போக் குவரத்து திட்டம் அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்டது.

கல்லூரி செல்லும் இளம் பெண்கள் முதல் வயதான பாட்டி வரை இத்திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, முழுக்க முழுக்க பெண்க ளுக்காக பெண்களே இயக்கும் புதிய பேருந்து சேவை அம்மாநி லத்தின் தலைநகரான திருவணந்தபுரத்தில் விரைவில் அறிமுகப் படுத்தப் படவுள்ளது.

இது குறித்து அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே. முனீர் கூறுகையில், "பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் She taxi திட்டத்தை அறிமுகப் படுத்தினோம்.

இதன் வெற்றியைத் தொடர்ந்து "She Bus" திட்டத்தை மாநில தலைநகரான திருவன ந்தபுரத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம். கொச்சி, கோலிக்கோடு ஆகிய நகரங்களில் இப்புதிய பேருந்துசேவை படிப்படியாக அறிமுகப்ப டுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட இப்பேருந்தில் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் பயணிக்கலாம். டிக்கெட்டின் விலை அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நிர்ணயி க்கப்படும்" என்றார்.
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings