தேனி மாவட்டம் குள்ளப்புரத்தை சேர்ந்த பலராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எங்கள் அறக்கட்டளை சார்பில் தேனியில் விவசாய கல்லூரி செயல்பட்டு வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விவசாய கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகத்திடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில்தான் கல்வி கட்டணத்தை செலுத்துகின்றனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தின் உத்தரவால் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகத்திடம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மனு குறித்து வேளாண்மை துறை செயலர், துணைவேந்தர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.