பாட்டில்களை வீசி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு... இலங்கை கடற்படை அட்டூழியம் !

பாக்ஜலசந்தி பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்தனர்.
 fishermen attack
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து (சனிக்கிழமை) ஏராளமான படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் தனித்தனியே பிரிந்து சென்று, கச்சத்தீவு, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் 8 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மீனவர்களை மிரட்டினர்.

மேலும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பாட்டில்களையும், உருட்டுக் கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக தப்பி வந்த முருகன் என்ற மீனவர் கூறினார்.

அப்பகுதியிலிருந்து செல்லாமல், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டதால், உயிருக்குப் பயந்த தமிழக மீனவர்கள் மீன் பிடிக்காமல் இரவோடு இரவாக கரை திரும்பியதாக, ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவர் எமரிட் தெரிவித்தார்.

மத்தியில் எந்த ஆட்சி பொறுப்பேற்றாலும் தங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள்,
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனை பொங்க தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings