நல்ல கதை அமைந்தால் படம் இயக்குவேன்.. ஒளிப்பதிவாளர் ராம்ஜி !

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ராம்ஜி. ‘பருத்தி வீரன்’, ‘ராம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ என பல படங்களுக்கு தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் அழகூட்டிய அவர் தற்போது 
 ஒளிப்பதிவாளர் ராம்ஜி
‘ஜெயம்’ ராஜா இயக்கும் ‘தனி ஒருவன்’ படத்தின் வேலைகளை முடித்த உற்சாகத்தில் இருக்கிறார். ஒரு மழை மாலையில் அவரைச் சந்தித்தோம். 

நீங்கள் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் 2 வருடங்களுக்கு மேல் நடக்கிறதே? 

அதற்கான காரணத்தைச் சொல்ல எனக்கு தெரியவில்லை. கதையைப் பொறுத்து அதைப் படம் பிடிப்பதற்கான நாட்களும் நீளும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் கதையை என்னிடம் சொன்ன செல்வராகவன், 90 நாட்களில் அதை முடித்துவிடலாம் என்றார். 

அதற்கு நான், “இக்கதையை 90 நாட்களில் முடிக்க முடியாது செல்வா. நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும்” என்றேன். எனக்கு தெரிந்து இந்திய திரையுலகில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’தான். 

இப் படத்துக்கு நாங்கள் நினைத்த மாதிரி கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைய வில்லை. அந்த வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கிறது. கிராஃபிக்ஸ் காட்சிகள் சரியாக அமைந்திருந்தால் அப்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். 

ஒரு படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட நாட்களில் முடிவது இயக்குநரின் கையில்தான் இருக்கிறது. எனக்கு அமைந்த கதைகள் எல்லாம் நீண்ட நாட்களை எடுத்துக்கொள்ளும் படங் களாகவே அமைந்துவிட்டது. இனி வருடத்துக்கு 2 படங்களை செய்ய முடிவெடுத்திருக்கிறேன். பார்க்கலாம். 

உங்கள் குருநாதரான பி.சி.ராம் உங்களுடைய ஒளிப்பதிவைப் பார்த்து என்ன சொன்னார்? 

‘பருத்தி வீரன்’ படத்தைப் பார்த் ததில் இருந்து வீரா என்றுதான் என்னை அழைப்பார். அந்தளவுக்கு அப்படத்தில் என்னுடைய ஒளிப்பதிவு அவருக்கு பிடிக்கும். ‘நான் உன்னிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன், உன்னால் முடி யும்’ என்று சொல்வார். என்னை உருவாக்கியவர் பி.சி. சார். அவருடைய இந்த வார்த்தை களை எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாக கருது கிறேன். 

ஒளிப்பதிவில் தற்போது நிறைய தொழில்நுட்ப மாற் றங்கள் வந்துவிட்டதே? 

‘தனி ஒருவன்’ படம் வரை நான் பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்திருக் கிறேன். 3 சதவீத காட்சிகள் மட்டும்தான் டிஜிட்டலில் செய்துள்ளேன். ‘தனி ஒரு வன்’ படம்தான் பிலிமில் செய்த கடைசி படமாக இருக்கும் என நினைக்கிறேன். 

திரையரங்கில் உள்ள திரைக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது பிலிம். அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் என்பது என் கருத்து.

இனி பிலிம் வருமா, வராதா என்று தெரிய வில்லை, ஆகையால் இனிமேல் டிஜிட் டல் தான். டிஜிட்டல் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. 

முன்பு வந்த சில டிஜிட்டல் கேமராக்கள் எனக்கு சரியாக அமையவில்லை. இப்போது அலக்ஸா போன்ற கேமராக்கள் நன்றாக இருக் கிறது. புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் நாம் நம்மை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். 

பல ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாக அறிமுகமாகி வருகிறார்கள். நீங்கள் ஏன் இயக்குநராக முயற்சி செய்யவில்லை? 

நான் ஒப்பந்தமாகி இருக்கும் பணிகளை முதலில் முடித்தாக வேண்டும். எனக்கு எழுதும் திறமை கிடையாது. எனக்கு பிடித்த நாவல்களை பட மாக பண்ணவேண்டும் என்றால் நிறைய பணம் செலவாகும். 

அந்தளவுக்கு நான் படம் பண்ண வேண்டும் என்றால், என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் வர வேண்டும். ஒரு சில ஐடியாக்களை நண்பர்களிடம் சொன்ன போது, ‘ஏன் இந்த மாதிரி கதை பண்ற? இளைஞர்களுக்கு பிடிக்கிற மாதிரி கதை பண்ணு’ என்றார்கள். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக படம் இயக்குவேன்.

தற்போது இளம் ஒளிப்பதிவாளர்கள் நிறைய பேர் வந்திருப்பது நல்லதா கெட்டதா? 

ஒளிப்பதிவில் மட்டுமல்ல, திரையுல கின் அனைத்து துறைகளிலும் புதிய இளைஞர்கள் வந்துகொண்டே இருக் கிறார்கள். இதில் நல்லது, கெட்டது இரண்டுமே இருக்கிறது. 

இப்போது வரும் இளம் ஒளிப்பதிவாளர்கள் டிஜிட் டல் கேமராவை கரைத்துக் குடித்தவர் களாக இருக்கிறார்கள். இந்திய அளவில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் முக் கியத்துவம் பெற்றவர்களாக இருக் கிறார்கள் என சொல்கிறார்கள். 

இந்த நிலை மாறி உலகளவில் போவ தற்கு இளம் ஒளிப்பதிவாளர்களால் முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் நீண்ட நாள் ஓடக்கூடிய ஒளிப்பதிவாளர்களாக இருக்கவேண்டும் என்று விரும்பு கிறேன். 

‘பாகுபலி’ படத்தை விட ‘ஆயிரத்தில் ஒருவன்’ பரவா யில்லை என்று கூறிவரும் இணைய வாசிகளுக்கு உங்களுடைய பதில் என்ன? 

இரண்டு படங்களையும் தயவு செய்து ஒப்பிட வேண்டாம். இன்றைக்கு இருக் கும் தொழில் நுட்பம் அன்றைக்கு இருந்தி ருந்தால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கொண்டாட ப்பட்டு இருக்கலாம். 

அப்படத்தில் சினிமாத் தனம் இருக்கக் கூடாது என்பதில் செல்வா தெளிவாக இருந்தார். சினிமாவில் பார்ப்பது போல எந்த ஒரு ராஜாவும் கிடையாது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்து க்காக நாங்கள் செய்த ஆராய்ச்சியில் எந்த ஒரு ராஜாவும் சாதாரணமாகத் தான் இருந்துள்ளார் என்பது தெரிய வந்தது. 

அதை வைத்து செல்வராகவன் உரு வாக்கியது தான் பார்த்திபன் பாத்திரம். அந்த படம் சரியாக போக வில்லை என்ற போது ஒரு சிறு வலி இருந்தது. 3 வருடங்கள் உழைத்த படத்தை நல்ல முயற்சி என்று அப்போது யாருமே சொல்ல வில்லை. கண்டு கொள்ளவும் இல்லை.

அமீர், செல்வராகவன் இருவரிடமும் பணி யாற்றிய அனுபவங் களைச் சொல்லுங்கள்? 

இருவருக்கும் வேறு வேறு பாணி. தான் எழுதிய வசனத்தை ஒரு நடிகர் கொஞ்சம் மாற்றினால் கூட செல்வரா கவன் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் அமீர் அப்படி யல்ல. கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் விட்டு விடு வார். ஆனால், அவர் நினைக் கிற நடிப்பு வர வேண்டும். 

அதுவரை விடவே மாட் டார். ‘ராம்’ படத்தில் ஜீவாவுடைய நடிப்பைப் பார்த்தால் அதில் அமீரின் டச் இருக்கும். அதேபோல் ‘பருத்தி வீரன்’ கார்த்தி யிடம் அமீர் தெரிவார்.

செல்வ ராகவன் கதை, திரைக் கதையில் நிறைய மெனக்கெடுவார். அவரைப் போல் நிறைய இயக்குநர்கள் யோசிப்ப தில்லை என்பது என் எண்ணம்.
Tags:
Privacy and cookie settings