ஊடகங்கள் பரபரப்பான செய்திக்காக அலைகின்றன.. ஹேமமாலினி

 ஊடகங்கள் பரபரப்பான செய்திக்காக என் மீது புழுதிவாரி தூற்று கின்றனர் என ஹேமமாலினி தெரிவித் துள்ளார். ஹேமமாலினி சென்ற காரிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால்
இந்நேரம் எங்கள் குழந்தை எங்களோடு விளையாடிக் கொண்டிருப்பாள்’ என்று புலம்பும் பெற்றவர்களின் வேதனை பெரும்பாலான இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கியது. 

ஒரு எம்.பி.யின் உயிர் ஒரு குழந்தையின் உயிரை விட விலைமதிப்பானதா? எதிரில் வந்த காரில் உள்ள மனிதர்களுக்கு என்ன நடந்தது என்று பார்க்க கூட அவருக்கோ அவருடன் வந்தவர்களுக்கோ நேரமில்லையா?

ஹேமமாலினி தனியார் மருத்துவமனைக்கும் அவர்கள் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? இந்தியாவில் ஏழையாக பிறப்பவன் சபிக்கப்பட்டவனா? என்று ஏகப்பட்ட கேள்விகள் சமூக வலைதலங்களில் எழுப்பப்பட்டது. 

விபத்தில் அடிபட்ட ஹேமமாலினிக்கு ஆறுதல் சொன்ன சினிமாக்காரர்களுக்கு பாவம் ஒரு குழந்தை இறந்து போன செய்தி தெரியவில்லை போலும், ஹேமமாலினிக்கு ஆறுதல் சொல்லும் அவர்கள் குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இப்படி ஆறுதல் கூறிய தெம்பால் சீக்கிரமாகவே குணமாகி வரும் ஹேமமாலினி அடுத்தடுத்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். முதலில் சிறுமியின் அப்பா போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 

இதற்கு பதிலளித்த சிறுமியின் தந்தை, ‘நான் அனைத்து போக்குவரத்து விதிகளையும் கடைபிடித்தேன். ஹேமமாலினியின் கார் 150 கி.மீ வேகத்தில் வந்தது. பெரிய மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்’ என தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில் தற்போது ஹேமமாலினியின் வெறுப்பு, ஊடகங்களை நோக்கி திசை திரும்பியுள்ளது.  பரபரப்பான செய்திகளுக்கான பசியில் இருக்கும் ஊடகங்கள் மிக கேவலமான முறையில் செய்திகளை வெளியிடுகின்றன.

இவர்களுக்கு கடவுள் அருள் புரிய வேண்டும்” என அவர் சாபத்துடன் கூடிய ஆசீர்வாதத்தையும் அருளியுள்ளார். என்னைக் கேவலப்படுத்துவதற்காகவே செய்திப் பசியில் இருக்கும் ஊடகங்களும் பொதுமக்களில் சிலரும் செயல்பட்டு வருகின்றனர். 

விபத்துக்கு பிறகு நான் சுயநினைவிழந்த நிலையில் இருந்ததை அறிந்தும் மனித நாகரீகமே கருதாமல் இவர்கள் என் மீது புழுதிவாரி தூற்றுகின்றனர். என் மீது இரக்கம் காட்டுங்கள் என்றும் ஹேமமாலினி கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings