கவர்ச்சியான வேடங்களில் நான் நடிப்பதை மாமியார் விரும்புகிறார்!

பொலிவூட்டின் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ரான கரீனா கபூரை திரைப்­ப­டங்­களில் கவர்ச்­சி­யான வேடங்­களில் பார்ப்­ப­தற்கு அவரின் மாமியார் விரும்­பு­கி­றாராம். நடிகை கரீனா கபூரே இத்­த­க­வலை தெரி­வித்­துள்ளார்.


கரீனா கபூர் கானின்  மாமியார் வேறு யாரு­மல்லர். பொலிவூட் திரை­யு­லகின் புகழ்­பெற்ற நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்­கிய சர்­மிளா தாகூர்தான் அவர்.
"நான் கவர்ச்­சி­யான வேடங்­களில் நடிப்­பதை அவர் விரும்­பு­கிறார்.

தபாங் படத்தில் வரும் பெவிக்கோல் பாட­லுக்கு நான் ஆடிய நடனம் அவ­ருக்குப் பிடித்திருந்­தது.

எப்­போதும் நான் கவர்ச்­சி­யா­கவும் அழ­கா­கவும் தோன்ற வேண்டும் என அவர் கூறுவார்" என கரீனா கபூர் தெரி­வித்­துள்ளார்.

தனது கணவர் சயீப் அலி கானின் தாயா­ரான சர்­மிளா தாகூர், தனக்கு உந்­து­சக்­தி­யாக விளங்­கு­வ­தா­கவும் 34 வய­தான கரீனா கபூர் தெரி­வித்­துள்ளார்.

 

"அவர் திரு­ம­ண­மாகி குழந்­தை­களைப் பெற்ற பின்­னரும் திரைப்­ப­டங்­களில் தொடர்ந்து நடித்தார். மிகப் பெரிய நட்­சத்­தி­ரங்­க­ளு­டனும் இயக்­கு­நர்­க­ளு­டனும் அவர் பணி­யாற்­றினார்.

நடிகை ஹேமா­மா­லினி மற்றும் எனது மாமி­யாரின் மிகப்­பெ­ரிய ரசிகை நான்" என­வும் கரீனா கபூர் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது 70 வய­தான சர்­மிளா தாகூர் 1959 முதல் 2010 ஆம் ஆண்­டு­வரை பொலிவூட் திரைப்­ப­டங்­களில் நடித்­தவர்.

இரு தேசிய விரு­துகள் பத்­மபூசன் விருது உட்­பட பல விரு­து­களை, வென்­றவர். அத்­துடன் இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மன்சூர் அலி கான் பட்­டோ­டியின் மனைவி இவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­தம்­ப­தியின் மக­னான சயீன் அலி கானை 2012 ஆம் ஆண்டில் கரீனா கபூர் திரு­மணம் செய்தார்.

கரீனா கபூர், சல்மான் கான் நடித்த பஜி­ரன்கி பாஜியான் திரைப்­படம் எதிர்­வரும் 17 ஆம் திகதி வெளி­யா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
Tags:
Privacy and cookie settings