ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் இன்று பிரம்மாண்ட மாக வெளியாகி யுள்ள படம் ‘பாகுபலி’.
தெரிந்த கதைதான் என்றாலும் பிரம்மாண்ட உருவாக்கம், காட்சியமைப்பு ஆகியனவற்றால் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படம் ஓடும் திரையரங்குகளில் இன்று விஜய் ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்து என்றே கூற வேண்டும்.
விஜய்யின் 58வது படமாக சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், என பலரும் நடித்துவரும் புலி படத்தின் டீஸர் ’பாகுபலி’ ஓடும் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
‘பாகுபலி’ படமும் அரசர் காலக் கதை, போர் என இருப்பதால், மற்ற சினிமா ரசிகர்களுக்கும் ’பாகுபலி’ படத்தைக் காண தங்களை இன்னும் தயார்ப் படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே புலி டீஸர் அமைந்தது.
மேலும் சின்ன திரையில் யூடியூப் , அல்லது டிவிகளில் மட்டுமே காணக் கிடைத்த ‘புலி’ டீஸர் பெரிய திரையில் ஒளிபரப்பானவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.