அமெரிக்காவின் பிரபல மொடலும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான பரிஸ் ஹில்டன், விமான விபத்தில் இறக்கப் போவதாக அஞ்சி, கதறியழுத சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது.
34 வயதான பரிஸ் ஹில்டன், நடிகை, பாடகி என பல முகங்களைக் கொண்டவர். அண்மை யில் துபாயில் ஹோட்டல் திறப்பு விழா வொன்றில் பங்கு பற்று வதற்காக துபாய்க்கு சென்றி ருந்தார்.
அவ்வை பவத்தை தொகுத்த ளித்தவர், துபாயை விமானம் மூலம் சுற்றிப் பார்க்கலாமா எனக் கேட்க, சந்தேகப் படாமல் ஆசையுடன் அதற்கு ஒப்புக் கொண்டார் பரிஸ் ஹில்டன்.
இதற்காக ஒரு சிறிய விமான த்தில் பரிஸ் ஹில்டன் உட்பட ஒரு குழுவினர் புறப்பட்டனர். விமானம் வானில் கிளம்பி யதும் பரிஸ் ஹில்டனு க்கு அதிர்ச்சி காத்திரு ந்தது.
அவ்விமா னத்தை செலுத்திய விமானி ஒரு சாகச நிபுணர் என்பதையும் தன்னுடன் பயணம் செய்ப வர்கள் நடிகர்கள் என்பதையும் பரிஸ் ஹில்டன் அறிந்திருக்க வில்லை.
எகிப்தின் பிரபல தொலைக் காட்சி நட்சத்திர மான ரமீஸ் கலாலும் அவர்க ளில் ஒருவர்.
'ரமீஸ் இன் கொன்ட்ரோல்' எனும் பெயரில் தொலைக் காட்சியில் வேடிக்கை நிகழ்ச்சி யொன்றை நடத்தி வருபவர் இவர். பரிஸ் ஹில்டனு க்கு அருகில் ரமீஸ் கலால் அமர்ந்தி ருந்தார்.
விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழ்நோக்கி சரியத் தொடங்கியது.
என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அங்க லாய்த்த பரிஸ் ஹில்டனிடம் விமானம் விபத்துக் குள்ளாகப் போகிறது என ரமீஸ் கலால் கூறினார்.
அவ்வளவு தான், விமான விபத்தில் தான் உயிரிழக்கப் போவதாக எண்ணி கதறியழ ஆரம்பி த்தார் பரிஸ் ஹில்டன். வாயில் வந்த கெட்ட வார்த்தை களையும் பயன்படுத்தி என்ன நடக்கிறது
ஏன் விமானத்தை தரை யிறக்க முடிய வில்லை என அவர் அழுது கொண்டே கத்தினார்.
ஆனால் ரமீஸ் கலாலும் ஏனை யோரும் உண்மையைக் கூறாமல், பரிஸ் ஹில்டனை தொடர்ந்தும் பீதிக்குள் ளாக்கினர்.
ஒரு கட்டத்தில் பயணிகள் போல் இருந்த ஒருவர் கதவை திறந்து கொண்டு பாய்ந்து உயிர் பிழைக்கப் போவதாக கூறி விட்டு கீழே பாய்ந்தார்.
அவர் ஒரு ஸ்கை டைவிங் கலைஞர் என்பது பரிஸுக்குத் தெரிய வில்லை. அதன்பின் பரிஸ் ஹில்டனும் குதித்து உயிர்தப் பலாம் என ஆலோசனை கூற, பரிஸின் அழுகை அதிகரித்தது.
உண்மை யிலேயே விமானம் விபத்துக் குளாகப் போகிறது என அவர் எண்ணி விட்டார். இறுதியில் விமானம் பாதுகாப்பாக தரை யிறங்கிய பின் மன்னிப்புக் கோரிய வாறே உண்மையை விளக்கினார் ரமீஸ் கலால்.
"உம்மை கொல்லப் போகிறேன். முழு நேரமும் நீர் பாசாங்கு செய்து கொண்டிருந்தீர்" என பரிஸ் ஹில்டன் பதிலளி த்தார்.
விமானங் களில் அடிக்கடி பயணம் செய்யும் பரிஸ் ஹில்டன், பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் நான் விமானத்தில் பயணம் செய்வதால்
விமானத்தில் இறந்து விடுவேன் என்ற அச்சம் எனது வாழ்க்கை யின் மிகப் பெரிய அச்சங் களில் ஒன்றாக உள்ளது" எனக் கூறினார்.