'முதல்வர் ஜெயலலிதா, இன்று கோடநாடு செல்கிறார்; அதற்கு முன், இன்று காலையில், எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கிறார்' என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க வேண்டி உள்ளது.
இந்த தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை, கடந்த மாதம், 30ம் தேதி நடந்தது. அன்று மாலையே, அவர் பதவியேற்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதவியேற்பு தள்ளிப்போடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை பற்றிய அறிவிப்பு, இன்னும் வெளியாகவில்லை.
அதன் காரணமாகவே, அவர் பதவியேற்பு தள்ளி போட்டதாக காரணம் சொல்லப்பட்டது.இன்னொரு தரப்பில், வரும், 5ம் தேதி, குரு பெயர்ச்சி நடக்கிறது. அது முடிந்ததும், ஜெயலலிதா பதவியேற்பார் என, கூறப்பட்டது.
இதற்கிடையில், இன்று காலை, 11:00 மணிக்கு பதவியேற்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதை முடித்ததும், பிற்பகல், 1:00 மணியளவில், அவர் கோவைக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்கிறார்.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.