குடிதண்ணீரை போட்டி போட்டு வியாபாரம் செய்யும் தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாணவர் மாணவியருக்காக தனியார் பள்ளி பல லட்சம செலவு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தது.
அதோடு அப்பகுதியில் குடிநீர் பிரச்சனையால் தவிக்கும் மக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்து வருவது பாராட்டை பெற்றுள்ளது.
கீழக்கரையில் ஒரு குடம் குடிநீர் ரூ.10 ரூபாய் வரையும் கேன் தண்ணீர் ரூ.40 வரையும் விற்கப்படுகிறது. இந்நிலையில் கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிக்பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி மாணவ மாணவியர்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை சுத்திகரித்து சுத்தமான குடிநீர் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
பள்ளியை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படுவதை அறிந்த பள்ளியில் தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் இப்ராஹிம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் குடிநீர் பள்ளியிலிருந்தே இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்.
இதன் மூலம் அப்பகுதியில் உள்ள மக்களும் குடிநீர் வசதியை பெற்றனர். அடிப்படை தேவையான குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய பள்ளியின் நிர்வாகத்தை அப்பகுதியினர் பாராட்டியதோடு இது போன்று மற்ற பள்ளிகளும் ஏற்பாடு செய்தால் குடிநீர் பிரச்சனை ஓரளவு சரி செய்யலாம் என தெரிவித்தனர்.