ஒரு நிமிட தடுமாற்றத்தால் பறிபோன உயி !

ஒரே ஒரு நிமிட தடுமாற்றத்தால் எந்த பாவமும் செய்யாத அப்பாவி இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பிவாண்டி டவுனில் உள்ள புலேநகர் பகுதியில் செயல்படாத நிலையில் ஒரு கல் குவாரி உள்ளது. அங்குள்ள ஒரு குட்டையில் நீர் தேங்கியிருப்பதால்,

சமீபத்தில் அப்பகுதியில் உள்ள சிவசங்கர்(28) தனது 2 நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதை அந்த குவாரி உரிமையாளரின் உறவினரான சுரேஜ் பார்த்துள்ளார்.

உடனே இவர்கள் திருடர்கள் என்று யோசிக்காமல் முடிவு செய்து, தனது அடியாட்களுடன் சேர்ந்து, சிவசங்கர் சொல்வதைக் கூட காது கொடுத்து கேட்காமல் அவர் மீது கற்களை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிவசங்கர் பலியானதாக அப்பகுதி போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். சுரேஜ் மீது  கொலை வழக்கும் அவரது அடியாட்கள் மீது நிதானமின்றி தவறாக நடந்து கொண்டதாகவும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings