விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற சானியாக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

கிராண்ட்சிலாம் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனையான சானியாவை மனமார வாழ்த்துவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல், "மிக சிறப்பான வெற்றியை பெற்ற உங்களால் நாடு பெருமை அடைகிறது" என்று பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் சானியாவை வாழ்த்தி உள்ளார்.
Tags:
Privacy and cookie settings