கமலஹாசன் பற்றி ராதாரவி தவறான பேச்சு.. விஷால் !

1 minute read
தென்னிந்திய   நடிகர் சங்க   தேர்தல்   தொடர்பாக நடிகர்   விஷால்  அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நாடக நடிகர் களிடம் ஆதரவு திரட்டி வருகி றார்கள்.

இது   தொடர்பாக   நேற்று திருச்சி   தேவர்   ஹாலில்  நாடக நடிகர்களுடன் ஆலோ சனை   கூட்டம்   நடந்தது. இந்த   கூட்டத்திற்கு   நடிகர் ஜெரால்டு மில்டன் தலைமை தாங்கினார்.   இதில்   கலந்து கொண்டு   விஷால்  பேசிய தாவது:-

நடிகர்   சங்க   தேர்தலில் பதவி   நாற்காலியை   பிடிக்க வேண்டும்  என்பதற்காக நாங் கள் ஊர் ஊராக செல்ல வில்லை.   சினிமா   எனது குடும்பம். அதில் நாடக கலை ஞர்களும் அங்கம்.

அவர்க ளின்   நலனுக்காக   குரல் கொடுத்தால்  அது  தவறா? நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. நடிகர்  சங்கம்   பற்றி விஷால் மட்டுமல்ல எல்லா நடிகர்களும்  இனி   கேள்வி கேட்பார்கள்.

நடிகர்  சங்க தேர்தலில் ரஜினிகாந்த் உள்பட அனைவரும் வரிசையில் நின்று ஓட்டு போட வேண் டும். மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள்,  நிச்சயம்  ஒரு மாற்றம் வந்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர்   நடிகர்  விஷால் நிருபர்களிடம்     கூறியதாவது:-


தென்னிந்திய நடிகர் சங் கத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது.   நடிகர் சங்க தேர்தலில் மூத்த சினிமா கலைஞர் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா,  ரஜினிகாந்த்,  விஜய காந்த்  உள்பட  அனைத்து முக்கிய    பிரமுகர்களையும் சந்தித்து வாக்களிக் கும்படி கேட்போம்.

கமலஹாசன் பற்றி ராதாரவி தவறாக பேசியி ருக்கிறார். அதற்கான  ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்.  கமலஹாசன்  எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண் டும் என்பதற்காக  இதை  நான் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறி னார்.

அப்போது அவருடன் நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன், ஜெரால்டு மில்டன், சரவணன், அலெக்ஸ் ஆகியோர் உடன் இருந் தனர்.  முன்னதாக நடந்த ஆலோ சனை  கூட்டத்தில்  திருச்சி மற்றும்  சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நாடக நடிகர் கள் திரளாக பங்கேற்றனர்.
Tags:
Privacy and cookie settings