ரியல் எஸ்டேட் மசோதா, 2013ல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றத்தின் படி, வீடு வாங்க விரும்புப வர்களுக்கு, கட்டுமான நிறுவனங்கள் என்ன உறுதி அளித்துள்ளதோ,
அவற்றை நிறைவேற்ற வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன ங்களின் அதிபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன.
கட்டுமான விவகார ங்களில் இதுவரை, அபராதம், கூடுதல் கட்டணம் போன்றவையே தண்டனையாக இருந்த நிலையில், முதல் முறையாக, மோசடி கட்டுமான நிறுவன ங்களின் அதிபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க, சட்ட திருத்தம் மேற்கொ ள்ளப்பட்டு உள்ளது.
இம்மாதம் கூடவிருக்கும் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில், ரியல் எஸ்டேட் மசோதா - 2013, திருத்தங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி கூட, சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டி ருந்தார்.
அதன்படி, அந்த மசோதாவில் சொல்லப் பட்டிருந்த திருத்தங்கள் அனைத்து துறைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்து கேட்கப்பட்டு, வரைவு மசோதா இறுதி செய்யப் பட்டுள்ளது.
முடிவாகியுள்ள மசோதா, லோக்ச பாவில் ஏற்கனவே நிறை வேற்றப் பட்டிருந்தாலும், அதில் ஏராளமான மாற்றங்கள்
செய்யப் பட்டுள்ளதால், லோக்ச பாவிலும், ராஜ்ய சபாவிலும் மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* வீடுகளை வாங்க விரும்பும் பொதுமக்களை பாதுகாக்கும் அம்சங்கள் கொண்ட முதல் சட்டம் இது தான். அதே நேரத்தில், கட்டுமானத் துறையின் பண வரவு - செலவு வெளிப்படையான முறையில் நடைபெற
ஏதுவான அம்சங்கள் கொண்டதும் இது தான். மேலும், இந்தத் துறையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களுக்கு எளிதான அம்சங்களை கொண்டது.
* ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் கட்டுமானங்களை கட்ட முடியும்; ஏஜன்டுகளாக செயல்பட முடியும்.
* ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு நடுவர் மன்றம் அமைக்கப்படும். தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக இதில் முறையிட முடியும்.
* இத்தகைய புதிய நடவடிக்கைகள், 2022ல், அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட்டத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும்.
மாற்றப்பட்ட மசோதா:
*விளம்பரத்தில் அல்லது கட்டுமான அறிவிப்பில் அறிவித்த உறுதிமொழிகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும் என்று இருந்தது மட்டும் மாற்றப்பட்டு, அத்தகையவர்களை சிறையில் தள்ளி, பொதுமக்களின் நலன் காக்க, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

* முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவில், வீடுகளுக்கான கட்டுமான நிறுவனங்களை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அது மாற்றியமைக்கப்பட்டு, தொழில்கள் மற்றும் வீடுகளுக்கான கட்டுமானங்களையும், இந்த மசோதா கட்டுப்படுத்தும்.
* எல்லா கட்டுமான திட்டங்களும், முழு விவரங்களையும், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும். எந்த நிறுவனம் கட்டுகிறது; திட்ட காலம்; அங்கீகாரம் அளித்துள்ள அமைப்பு; ஒப்பந்ததாரர்கள் யார்;
கட்டடக் கலை வல்லுனர் யார் போன்ற அனைத்து விவரங்களும், இணையதளம் அல்லது விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் படி தான் செயல்படுத்தப்பட வேண்டும். குறைபாடுகள் இருந்தால், முழு பணத்தையும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.
* கட்டுமான நிதியில், 50 சதவீதத்தை வங்கியில், தனிக் கணக்கு துவக்கி, 'டிபாசிட்' செய்த பின் தான், பணிகளையே துவக்க வேண்டும்.