நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, பூஜா காந்தி,
விஜயசாந்தி ஹேமமாலினி என பலர் விரும்பிய கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்சிகளில் முக்கிய பதவிகளையும் பெற்று இருக்கிறார்கள்.
நடிகை நமீதாவும் அரசி யலில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியில் இணைவார் என்று பேச்சு அடிபடுகிறது.
இந்த வரிசையில் திரிஷா வும் அரசியலுக்கு வரப் போவதாக அவருக்கு நெருங் கிய வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. திரிஷாவுக்கு 32 வயது ஆகிறது. 2002-ல் கதாநாயகியாக அறிமுக மானார்.
பதிமூன்று வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது தெலுங்கு, தமிழில் ஐந்து படங்களை கைவசம் வை த்துள்ளார்.
பதிமூன்று வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது தெலுங்கு, தமிழில் ஐந்து படங்களை கைவசம் வை த்துள்ளார்.
சமீபத்தில் திரிஷாவுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது. இது அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. திருமணத்தின் மீதே வெறுப்பையும் ஏற்படுத்தியது.
இதனால் அதில் இருந்து விலகி இருக்கிறார். இனிமேல் திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன் என்று கூறினார்.
இதனால் அதில் இருந்து விலகி இருக்கிறார். இனிமேல் திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன் என்று கூறினார்.
இந்த நிலையில்தான் அவரது சிந்தனை அரசியல் பக்கம் தாவி உள்ளது. வயதாவதால் சினிமா மார்க்கெட் விரைவில் சரிந்து விடும் என உணர்ந்து இருக்கிறார். புது கதாநாயகிகள் வரத்தும் அதிகமாகி இருக்கிறது.
எனவே அரசியலில் குதிக்க வியூகம் வகுக்கிறார் என்கின்றனர். அரசியல் கட்சிகளின் நடவடிக்கை களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அ.தி.மு.க.வில் சேர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் - அமைச்சர் ஜெய லலிதாவை திரிஷாவுக்கு மிகவும் பிடிக்கும். தனது டுவிட்டர் பக்கத்திலும் ஜெயலலிதாவுடன் சேர்ந்து இருப்பது போன்ற படத்தை வைத்து இருக்கிறார்.
எனவே அ.தி.மு.க.வில் இணைந்து பணியா ற்றுவது அவர் திட்டமாக இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார் என எதிர் பார்க்கப் படுகிறது.