வறுமையில் பறவை முனியம்மா.. முதியோர் உதவித் தொகை !

சென்னை: தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக நடித்து ‘மதுரை வீரன் தானே' என்ற ஒரே பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. 
சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற்றார். இன்றைக்கு வாய்ப்பு குறைந்து போனதால் வறுமையில் வாடுவதாகவும், முதியோர் உதவித் தொகை கேட்டு அரசை அணுகியிருப்பதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா வாய்ப்பு 

மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்த முனியம்மா அடிப்படையில் ஒரு நாட்டுப்புற பாடகி. ஊர் திருவிழாக்களில் முனியம்மாவின் பாட்டுக்கு கூட்டம் அள்ளும். சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள்.

கிராமத்து பாடல் 

இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று உற்சாகமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள்.

சின்னத்திரை சமையல் 

ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் வாரம் தோறும் சமையல் குறிப்பு வழங்கி அசத்தினார். அம்மியில் பாடிக்கொண்டே அரைத்து ருசிக்க ருசிக்க சமையல் கற்றுத்தருவார் பரவை முனியம்மா.

வறுமையில் வாடும் முனியம்மா 

தற்போது வாய்ப்பு குறைந்து வறுமை சூழ்ந்து, வயோதிகம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார் முனியம்மா.

ரேஷன் அரிசி சாப்பிட்டு ஜீவன் வாழ்வதாய் கூறும் முனியம்மா முதியோர் உதவித் தொகையை கேட்டு காத்திருக்கிறார்.
உதவித்தொகை கிடைக்குமா? 

மருந்து வாங்கு வதற்கு கூட அவரிடம் காசு இல்லை. அவருக்கு முதியோர் உதவி தொகைக் கூட தேவை இல்லை . கிராம கலைஞர் களுக்கு கொடுக்க ப்படும் உதவித் தொகை கிடைத்தாலே அவர் கலைக்கு கிடைத்த அங்கிகா ரமாக இருக்கும் என் கின்றனர் அவரது உறவினர்கள்.
Tags:
Privacy and cookie settings