ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது 2 முதல் 3 படங்களாவது எல்லா மொழிகளிலும் வெளிவரும், ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அதற்கு நேர்மாறாக பெரிய அளவில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படம் வெளியானதால் இந்தியா முழுவதும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில், வெளியாக இருந்த அனைத்துப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
தமிழில் மட்டும் மகாராணி கோட்டை மற்றும் காமராஜ் என்று 2 சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன, மற்ற அனைத்து மொழிகளிலும் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
இதே மாதிரி வேறு எப்போதும் நிகழ்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதனால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு வேறு எந்தப் படங்களும் வசூலில் பெரிய அளவில் சாதனை நிகழ்த்துமா? என்பது சந்தேகம்தான்.