அதிகமாக சாப்பிடுவதை வெளியேற்றும் கருவி !

உடல் எடை அதிகரிப்பு உலகம் முழுவதும் பெரிய பிரச்சினையாகி வருகிறது. எடை அதிகரிக்காமல் இருப்பதற்குச் சிலர், சாப்பிட்ட உடன் வாந்தி எடுத்து விடுவார்கள்.
அதிகமாக சாப்பிடுவதை வெளியேற்றும் கருவி !
தை புலிமியா என்பார்கள். புலிமியா போல் வேலை செய்கிறது ’அஸ்பயர் அசிஸ்ட்’ தயாரித் திருக்கும் கருவி. 

அதிக உணவு சாப்பிட்ட பிறகு, அதை அப்படியே ஜீரணம் செய்ய விடாமல், இரைப்பை யில் இருந்து வெளியேற்றி விடுகிறது இந்தக் கருவி.

நாக்குக்குச் சுவையும் மூளைக்குச் சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். அதே நேரத்தில் உணவை வெளி யேற்றி விடுவதால் கலோரிகளும் உடலில் சேராது. 

அமெரிக்காவில் சில நூறு மக்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் பிரிட்டனிலும் விற்பனைக்கு வருகிறது.

இந்தக் கருவிக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. டீன் கேமென் என்பவர் இந்தக் கருவியைக் கண்டு பிடித்திருக்கிறார். 15 நிமிட அறுவை சிகிச்சையில் வயிற்றில் ஒரு குழாயைப் பொருத்தி விடுகி றார்கள். 

வயிறு நிறைய சாப்பிட்ட இருபது நிமிட ங்களுக்குப் பிறகு, வயிற்றில் பொருத்தப் பட்டுள்ள குழாயில் கருவியை இணைக்க வேண்டும். கருவியில் இருக்கும் தண்ணீர்ப் வயிற் றுக்குள் செல்லும். 
அங்கு ஜீரணம் ஆகாத உணவுகள் இன்னொரு குழாய் மூலம் வெளியே வரும். கழிவறையில் அவற்றை வெளியேற்றிவிட வேண்டும். பிரிட்டன் மருத்துவர் அந்தோனி ஷாண்டே இந்தக் கருவியை வரவேற்று இருக்கிறார். 

இந்தக் கருவியை உபயோகி ப்பதால் தொற்று, நீர்க்கசிவு, குறைவான சத்து, மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்றவை பின் விளைவுக ளாக ஏற்படும் என்று எச்சரிக்கி றார்கள் நிபுணர்கள். 

அடக் கொடுமையே.. ஆரோக்கிய மான உணவு பழக்கம் தான் சிறந்தது, எளிமை யானது.. 

உலகிலேயே மிகச் செங்குத்தான சாலை நியுஸிலாந்தில் உள்ள பால்ட்வின் சாலை தான். இந்தச் செங்குத்துச் சாலையில் நடப்பதற்கு, இரண்டு விஷயங்கள் அவசியம்.

வலிமையான கால்களும் உடலில் சக்தியும் இல்லாவிட்டால் நடக்கவே இயலாது. 350 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சாலை உலகிலேயே செங்குத் தான சாலை என்று சொல்கி றார்கள்.  

சாதாரண மான சாலைகளில் 2.86 மீட்டர் நடப்பதும் பால்ட்வின் சாலையில் 1 மீட்டர் நடப்பதும் சமம். இங்கே வசிப்பவர்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. வாகனங்களைத் தான் பயன்படுத்து கிறார்கள். 
வாகனம் ஓட்டுவதும் அத்தனை எளிதான விஷய மில்லை. ஆரம்பத்தில் செங்குத்துச் சாலையால் எரிச்சல் அடைந்த மக்கள், இன்று சாலை மூலம் தங்கள் பகுதி பிரபலமடை ந்ததை எண்ணி மகிழ்கிறார்கள். 

இவர்களுக்குத் தனியாக உடற்பயிற்சி தேவை இல்லை! 
 
தென்னாப் பிரிக்காவில் புரொபெட் பென்யூல் என்ற மத போதகர் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தி ருக்கிறார். ஓர் இளம் பெண்ணின் தலையில் இருந்து நேரடியாக முடியை எடுத்துச் சாப்பிடுகிறார்.

தன்னுடைய பக்தர்களையும் அவ்வாறே செய்யச் சொல்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி தான் கடவுளைத் தொழுதனர்.

அதனால் அவ்வாறே கடவுளைத் தொழ வேண்டும் என்று கூறி, சர்ச்சையில் சிக்கினார். தற்போது முடியைச் சாப்பிடச் சொல்லி, பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறார்.

24 வயது புரொபெட், தேவனின் அற்பு தத்தால் ஒரு பெண்ணின் தலை முடி உணவாக மாறியது. 

நாமும் தேவன் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பெண்ணின் முடியை உணவாக எடுத்துக் கொண்டால், தேவனுக்குப் பிடித்தவ ர்களாக மாறி விடுவோம் என்கிறார். 

தன்னை விமர்சிப்ப வர்களிடம், சாத்தானின் பிடியில் இருந்து காப்பதற்கே தான் புதுப்புது உத்திகளைக் கையாள் வதாகச் சொல்கிறார் புரொபெட். 
டொரண்டோ சாலையில் ரக்கூன் ஒன்று இறந்து கிடந்தது. நீண்ட நேரமாகியும் அவற்றை அப்புற ப்படுத்த வில்லை. அந்த வழியே சென்றவர்கள் விலங்குகள் மையத் துக்குத் தகவல் கொடுத்தனர். அவர்களும் வரவில்லை.

உடனே ஏதாவது செய்து கவன ஈர்ப்பு கொண்டு வர வேண்டும் என்று சிலர் நினைத்தனர். ரக்கூன் மீது பூங்கொத்து, புகைப்படம் வைத்தனர். மெழுகு வர்த்தி ஏற்றினர்.

அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பினர். இரண்டு மணி நேரத்தில் புகைப்படம் வேகமாகப் பரவி விட்டது. நகர கவுன்சிலர் உடனே ஆட்களை அனுப்பி, ரக்கூனை அப்புறப் படுத்தினார். 

நல்ல விஷயத்துக்கும் சமூக வலைதளம் பயன்படுது!
Tags:
Privacy and cookie settings