மும்பை ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்!

பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் சேவை திட்டத்தை, மும்பை -ஆமதாபாத் நகருக்கு இடையே அமைப்பது குறித்த இறுதி ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
தாக்கல்: 

மும்பை- ஆமதாபாத் நகருக்கு இடையே 505 கி.மீ., துாரத்துக்கு புல்லட் ரயில் சேவையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, ஜே.ஐ.சி.ஏ., (சர்வதேச ஜப்பானிய ஒத்துழைப்பு அமைப்பு) அதிகாரிகள், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் தாக்கல் செய்தனர். இதில் இத்திட்டத்திற்கு, ரூ.98,805 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பயண நேரம்: 

எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது 7 மணி நேரமாக உள்ள மும்பை -ஆமதாபாத் பயணநேரம், புல்லட் ரயில் சேவையில் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். இத்திட்டத்திற்கு குறைந்த வட்டி விகிதத்தில், கடனுதவி வழங்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.

கட்டணம்: 

மத்திய அரசின் ஒப்புதல் பெற்று 2017ல் திட்டப்பணிகள் துவக்கப்பட்டால், 2023ம் ஆண்டு பணிகள் முடிந்து, 2024ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புல்லட் ரயில் சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையிலிருந்து ஆமதாபாதிற்கு மணிக்கு அதிகபட்சமாக 350கி.மீ., வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் கட்டணம், சுமார் ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்படலாம் என ரயில்வே தரப்பிலிருந்து தெரியவருகிறது.

இது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கான கட்டணத்தை விட ஒன்றறை மடங்கு அதிகம். திட்டம் துவக்கப்பட்டால், புல்லட் ரயிலில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பயணிக்கலாம் என தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings