சவூதி அரேபியாவின் இளவரசரும், நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சருமான சௌத் அல் பைசல் அவர்கள் இறந்து விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)
இவர் மன்னர் காலித், மன்னர் ஃபஹத், மன்னர் அப்துல்லாஹ், மன்னர் சல்மான் ஆகிய நான்கு மன்னர்களின் ஆட்சியிலும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
உடல்நிலை காரணமாக இறந்து விட்டார், தற்போது அவருக்கு வயது 75, சவூதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று வெளிப்படையாக அறிவித்து
அமெரிக்க ராணுவம் சவூதி அரேபியாவை விட்டு படிப்படியாக வெளியேறியதற்கு காரணமாக இருந்தவர். அரபு நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்.
பாலஸ்தீனை தனி நாடாக உருவாக்கிட தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார். அமெரிக்காவின் எதிர்ப்புகளை மீறி ஹமாஸ் இயக்கத்துடன் நல்லுறவு பாராட்டினார்.
அவருடைய மறுமை வாழ்வு சிறக்க ஏக இறைவனிடம் பிரார்த்திப்பீராக....