முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு, நடிகர் விவேக் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு இந்திய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியான தகவல். இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பு.
தமிழ்நாட்டில் மரம் நட வேண்டும் என்ற ஒரு செய்தியை எனக்கு அவர் கூறினார். நான் இதுவரை 27 லட்சம் மரக்கன்று களை நட்டு இருப்பது அவரின் அறிவுரை மற்றும் ஆசியால் தான்.
அவர் எனக்கு கூறிய இலக்கு தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகள். அவர் ஆத்மாவுக்கு செய்யும் மரியாதை அந்த ஒரு கோடி மரக்கன்று களை நான் நட்டு முடிப்பது தான்.
அவர் உடலால் மறைந்தாலும் அவருடைய எழுத்துகளும், பேச்சுகளும் என்றென்றும் இந்திய திருநாட்டின் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டி யாகவே இருக்கும்.
தமிழ்நாட்டின் பொக்கிஷம், இந்தியாவின் கவுரவம் நம்மை விட்டு பிரிந்திரு க்கிறது. இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.