மெக்சிகோவில் பிறந்த ஆண் குழந்தையின் மர்ம உறுப்பை பயிற்சி மருத்துவர்கள் வெட்டிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவைச் சேர்ந்தவர் டியாகோ ரேன்ஜெல். அவரது மனைவி கான்ட்ரியஸ் பிரசவத்திற் காக அங்குள்ள சால்டிலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மூத்த மருத்துவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்குமாறு பயிற்சி மருத்துவர் களுக்கு உத்தர விட்டதாக தெரிகிறது.
அதன்படி பயிற்சி மருத்துவர்கள் தொப்புள் கொடியை அறுத்தபோது எதிர்பாராதவிதமாக குழந்தையின் மர்ம உறுப்பு வெட்டப்பட்டது.

இதனால், பதறிப் போன மருத்துவர்கள் சேதம் அடைந்த மர்ம உறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இது குறித்து அறிந்த குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்கும்போது எதிர் பாராத விதமாக மர்ம உறுப்பு சேதமடைந்தது.
ஆனால், அறுவை சிகிச்சை மூலம் காயத்தை சீர் செய்து விட்டோம். குழந்தையின் பெற்றோர்கள் அளித்த புகாரினைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.