கலாமிற்கு அஞ்சலி - நாளை தமிழகம், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், 11 வது குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார்.
 akalam
அதனையடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படவும் உள்ளது. 

முன்னாள் குடியரசுத்தலைவரான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். 

அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்தியாவில் 7 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மேலும், 7 நாட்களும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் கனவு நாயகனான அவரின் மறைவிற்காக நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி செய்தி வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் புதுச்சேரியிலும் அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings