பட்டம் வென்றதை நம்பவே முடியவில்லை சானியா மிர்சா பேட்டி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா இங்கிஸ் ஜோடி இறுதிப்போட்டியில் வெற்றிப் பெற்று பட்டம் வென்றுள்ளனர்.


விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் மகரோவா-வெஸ்னினா ஜோடியை சந்தித்தது. இதில் விளையாடிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி 5-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

இது குறித்து சானியா மிர்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விம்பிள்டன் இரட்டையரில் பட்டம் வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. இது மிகவும் வியப்பாக உள்ளது. இதற்காக பல வருடங்களாக கடினமாக பயிற்சி எடுத்து விளையாடி வருகிறேன்.

எனது வெற்றி மற்ற பெண்களுக்கும் வாழ்வில் சிறந்த இலக்கை எட்ட ஊக்கமாக அமையும் என நம்புகிறேன் இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.
Tags:
Privacy and cookie settings