உத்தரபிரதேசத்தில் சொத்து பிரச்சனை தொடர்பாக அண்ணனை தம்பி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள நட்வாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜேந்திரா. இவருக்கும் அவரது அண்ணன் ரமேஷ் சிங் என்பவருக்கும் நீண்ட காலமாக சொத்துப்பிரச்சனை நிலவி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ரமேஷ்சிங் மற்றும் ராஜேந்திரா ஆகிய இருவருக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக இன்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ராஜேந்திரா ரமேஷ்சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். சுதாரித்துக் கொண்ட ரமேஷ் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற ராஜேந்திரா மற்றும் அவரது உறவினர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சொத்துப்பிரச்சனை தொடர்பாக அண்ணனை தம்பி சுட்டுக் கொன்ற சம்பவம் நட்வாரி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.