லலித் மோடியின் ஆடம்பர கார்கள் !

அன்னிய செலாவணி மற்றும் நிதி மோசடி வழக்கில் சிக்கி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந் திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் அமைப்பின் 


முன்னாள் தலைவர் லலித் மோடி, சமீபகாலமாக இந்திய அரசியலில் புயலை கிளப்பி வருகிறார்.

தப்பி ஓடி மற்றொரு நாட்டில் தஞ்சமடைந்து வாழ்க்கை நடத்தி வந்தாலும், அவர் தனது ராஜபோக வாழ்க்கையை கைவிடவில்லை. 

ஐபிஎல் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அவர் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவர்.

செல்வ செழிப்பும், அரசியல் செல்வாக்கும் உள்ள ஒருவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார்.

ஜெயிலுக்கு போவதை தவிர்த்துக் கொண்டு, இங்கிலாந்தில் தற்போது தான் விரும்பிய ஆடம்பர வாழ்க்கையை தொடர்கிறார். 

இந்த நிலையில், லலித் மோடியின் செல்வ செழிப்பை தெரிந்துகொள்ள அவர் வைத்திருக்கும் கார்களே முக்கிய சாட்சியாக கூறலாம்.

அதில், சாம்பிளுக்காக அவரிடம் இருக்கும் சில ஆடம்பர கார் மாடல்கள் உங்களது பார்வைக்கு...

01. அஸ்டன் மார்ட்டின் ரேபிட்

லலித் மோடி தனது மனைவி மினாலுக்காக வாங்கி கொடுத்த கார் இது. ஆனாலும், இந்த காரை அதிகம் பயன்படுத்துபவர் லலித் மோடிதான்.

லண்டன் சாலைகளில் இந்த காரில் லலித் மோடி அடிக்கடி தென்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது 3.5 கோடி விலை மதிப்புடைய கார். இந்த காரில் 350 பிஎச்பி பவரையும், 600என்எம் டார்க்கையும்


அதிக பட்சமாக வழங்க வல்ல வி12 எஞ்சின் பொருத்தப் பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

02. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி

உலகின் மிகவும் ஆடம்பரமான எஸ்யூவி மாடல் என்ற பெருமையை பெற்றது.

ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங் களால் ரசித்து வாங்கப்படும் மாடல் இது.

தனது லண்டன் வீட்டில் இந்த எஸ்யூவி ஒன்றையும் அவர் வாங்கி பயன்படுத்தி வருகிறார். 

இது ஒரு ஆஃப் ரோடு அம்சங்கள் பொருந்திய ஆடம்பர எஸ்யூவி என்பதி லிருந்து லலித்

மோடியின் கார் பிரியத்தை எந்தளவுக்கு ஆழமானது என்பது புரிந்து கொள்ள முடியும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி எஸ்யூவியில் 5.8 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த எஸ்யூவி மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லக் கூடிய திறன் கொண்டது.

03. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

இந்தியாவில் இருக்கும்போது லலித் மோடி அதிகம் பயன்படுத்திய கார்.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் சிற்பபான இடத்தை பெற்ற இந்த கார் லலித் மோடியையும் கவர்ந்ததில் வியப்பில்லை.


பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 760எல்ஐ மாடல்தான் லலித் மோடி பயன் படுத்தினார்.

இதுதான், அந்த காரின் டாப் வேரியண்ட் என்பது குறிப்பிடத் தக்கது. 

இந்த காரில் 540 பிஎச்பி சக்தியையும், 760 என்எம் டார்க்கையும் வழங்கும் வி12 பெட்ரோல் எஞ்சின் கொண்டது. இந்த கார் ரூ.1.95 கோடி விலை மதிப்பு கொண்டது.

04. ரேஞ்ச்ரோவர் ஆட்டோ பயோகிராபி

லலித் மோடியின் லண்டன் வீட்டு கராஜில் இருக்கும் மற்றொரு ஆடம்பர எஸ்யூவி ரேஞ்ச்ரோவர் ஆட்டோ பயோகிராபி எஸ்யூவி.

எஸ்யூவி வகை மாடல்கள் மீது இருக்கும் ஆர்வ மிகுதியால் அவர் வாங்கி யிருக்கும் புதிய மாடல் இது.


சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பெஷல் எடிசன் மாடல்.

இந்த எஸ்யூவி யில் 503 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப் பட்டிருக்கிறது.

இதுவும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டி ருப்பதோடு, ஏராளமான சொகுசு வசதிகளை அளிக்கிறது. ரூ.2.75 கோடி மதிப்பில் வாங்கி யிருக்கிறார்.

05. பென்ஸ் எஸ் கிளாஸ்

உலகின் ஒவ்வொரு கோடீஸ்வரர்கள் வீட்டு கராஜில் கண்டிப்பாக இடம் பிடித்து விடும்

ஒரு மாடல் லலித் மோடியின் வீட்டு கராஜிலும் இடம் பெற்றிப்பதில் ஆச்சரியப் படுவதற் கில்லை.

முந்தைய தலைமுறை W221 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் மாடல்தான் லலித் மோடியிடம் உள்ளது.

பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் அதிகம் விற்பனை யாகும் எஸ்350 சிடிஐ மாடலையே லலித் மோடி வைத்தி ருக்கிறார்.

இந்த காரில் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப் பட்டிருக்கிறது. 


லலித் மோடியின் முந்தைய தலைமுறை W221 மாடல் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் தவிர்த்து,

புதிய தலைமுறை பென்ஸ் எஸ் கிளாஸ் W222 கார் மாடலும் உள்ளது. லலித் மோடியின் மகன் ருச்சிர் இந்த காரில் பாதுகாவலர்கள் புடைசூழ அடிக்கடி காண முடிகிறது. 

புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் மாடலின் இடவசதியும், சொகுசு அம்சங்களும் அனைவரை யும் வியக்க வைக்கும்.

தற்போது லலித் மோடியுடன் லண்டனில் வசித்து வரும் அவரது மகன் ருச்சிர்தான் இந்த காரை அதிகம் பயன்படுத்தி வருகிறார்.

06. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

லலித் மோடியின் 50வது பிறந்த நாளன்று அவரது மகனும், கார் ஆர்வலரு மான ருச்சிர் பரிசளித்த கார் மாடல் இது. இந்த காரில் ஒரு விசேஷம் இருக்கிறது. 


அதாவது, இந்த காரின் நம்பர் பிளேட் கிரிக்கெட்[CRI3KET] என்ற பதிவெண்ணுடன் வாங்கப் பட்டிருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற நம்பர் பிளேட்டுகளை அதிக விலை கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவிலும் விற்பனையில் இருக்கும் இந்த மாடல் ரூ.4.72 கோடி மதிப்பு கொண்டது.

இந்தியா வில் இப்போது அதிக விலை கொண்ட ஃபெராரி மாடலும் இதுவே. ஃபெராரியின் அதிவேக, அதிசக்தி வாய்ந்த மாடலாகவும் இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings