இஸ்லாத்தை எதிர்த்தவர், மன்னிப்பு கேட்கிறார் !

ஜேர்மன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளிடம் ‘பெகிடா’ அமைப்பின் முன்னால் தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இஸ்லாமயமாக்குதலுக்கு எதிராக செயல்படும் பெகிடா(Pegida) அமைப்பின் முன்னால் தலைவரும், அகதிகள் குறித்த விமர்சகரான Kathrin Oertel, கடந்த வியாழக்கிழமையன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஜேர்மன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் உள்நாடுகளின் பிரச்சனைகளுக்கு அந்நாடுகளிடம் தஞ்சம் கோரி வரும் அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களே அடிப்படை காரணம் என விமர்சனம் செய்தேன்.

எனது விமர்சனம் மிகவும் தவறு. இந்த கருத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோறுகிறேன்.

ஜேர்மன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்து வரும் பிரச்சனைகளுக்கு  அகதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் அடிப்படை காரணம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜேர்மனிக்கு வருகை தரும் வெளிநாட்டினர் மற்றும் இஸ்லாமியர்கள், ஜேர்மனியின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை மதித்து ஜேர்மனியர்களோடு இணைந்து செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பெகிடா அமைப்பின் தலைவராக Kathrin Oertel செயல்பட்ட போது, ஜேர்மனிக்கு தஞ்சம் கோரி வரும் வெளிநாட்டு இஸ்லாமியர்களை அவர் வன்மையாக கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டார்.

தற்போது இந்த செயலுக்கு ஒட்டுமொத்த அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதுடன் அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings