தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ் தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
10 ஆயிரம் டன் வெங்காயத்தை பாகிஸ்தான், சீனா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்காயம் போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளது என்றும், விலையேற்றம் குறித்து பீதியடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் வெங்காயத்தின் விலை யை நிர்ணயிப்பது மும்பையை அடுத்த நாசிக் சந்தைதான்.
இம்மாதத் தொடக்கத்திலிருந்து இங்கு வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 66 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 15-லிருந்து ரூ. 25 ஆக உயர்ந் துள்ளது.
தற்சமயம் ரபி பருவ சாகு படியில் விளைந்த 28 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளதாக தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குநர் ஆர்.பி.குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திர மாநிலத் திலிருந்து வெங் காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறையும் என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும் தேசிய வேளாண் கூட்டுறவு சம்மேளனம் (நாஃபெட்) 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர் விட்டுள்ளது. இதற்கான டெண்டர் பாகிஸ்தான், சீனா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து கோரப் பட்டுள்ளது.