பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரி யான ஷமிதா ஷெட்டி குத்தாட்ட ங்களுக்குப் பெயர் போனவர். கிளு கிளுப்பான கவர்ச்சி குத்தாட்ட ங்களால் இளை ஞர்களின்
இதய திரையில் தீப்பிடிக்க வைத்த ஷமிதா, தன்னை ஒரு குத்தாட்ட நடிகை என்று அழைப்பது பிடிக்க வில்லை என்கிறார். ‘‘குத்தாட்ட வாய்ப்புகளை மறுத்து மறுத்து எனக்கு அலுத்து விட்டது.
ஒரு குத்தாட்ட நடிகையாக அறியப் படுவதில் எனக்கு விருப்ப மில்லை. ஆனால் நடிகர், நடிகைக ளுக்கு எளிதாக முத்திரை குத்தி விடுகிறார்கள். எனக்கு சூட்டப் பட்ட பெயருக்கு, ஆரம்பத்தில் எனக்கு வந்து குவிந்த குத்தாட்ட வாய்ப்புகள் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார் ஷமிதா.
ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் வெளியான ‘மொகப்பத்தீன்’ படத்தில் அறிமுகமான ஷமிதா, ‘மேரே யார் கி ஷாதி ஹே’ படத்தில் இடம்பெற்ற ‘ஷரரா...
ஷராரா’, ‘சாதியா’வின் ‘சோரி பே சோரி’ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் ‘பச்’செனப் பதிந்தார். ஆனால் இனியும் குத்தாட்டக் குதியாட்டம் போடத் தான் தயாரில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஷமிதா.
‘‘நான் ஒரு நடிகை. எனக்குச் சவால் அளிக்கக்கூடிய வேடங்களை நான் எதிர்பார்க்கிறேன். தற்போது சினிமாவில் புதிய கதை, புதிய பாத்திரங்கள் என்று நிறைய சோதனை முயற்சிகள் நடக்கின்றன.
எந்த மாதிரி வேடத்தில் நடிக்கவும் நான் தயார். திரையில் ஒரு காட்சிப்பொருளாக மட்டும் வந்துபோக விரும்பவில்லை’’ என்று ஷமிதா தனது எண்ணத்தைக் கூறுகிறார்.
‘‘நல்ல கதாபாத்திரம் என்றால் நான் துணை வேடங்களில் நடிக்கவும் ரெடிதான். குறிப்பிட்ட பாத்திரங்களில்தான் நடிப்பேன் என்று என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.’’ என்கிறார்.
தனது பத்தாண்டு கால சினிமா வாழ்வில் இந்தி மட்டுமின்றி, சில தமிழ், தெலுங்குப் படங்களிலும் ஷமிதா நடித்திருக்கிறார். ஆனால் தனது படங்களின் எண்ணிக்கை தனக்குத் திருப்தி தரவில்லை என்கிறார்.
‘‘நான் குறைவாகவே நடித்திருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் நடிக்கவேண்டும். நான் நடித்த பாத்திரங்கள் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் படங்களின் எண்ணிக்கையில் எனக்குத் திருப்தி இல்லை.
இதைவிட அதிகமான படங்களில் நடித்திருப் பதற்கான தகுதி கொண்டவள் நான். மக்கள் எனது திறமையைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் கூட படங்கள் வேண்டும். அதற்கான வாய்ப்புகள் எனக்கு அதிகமாக அமைய வில்லை’’ என்று கூறும் ஷமிதாவின் குரலில் ஆதங்கம் தொனிக்கிறது.
சினிமாவில் தனக்கு தரமான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால்தான் ‘இன்டீரியர் டெக்கரேஷன்’ எனப்படும் உள்ளரங்க அலங்காரத்தில் கவனம் செலுத்தியதாகக் கூறுகிறார் ஷமிதா.
‘சினிமாவில் எனக்கு வந்த வாய்ப்புகள் பிடிக் காததால் நான் நடிப்பில் இருந்து கொஞ்ச காலம் விலகியிருக்க முடிவெ டுத்தேன். ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே நான் எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.
எப்போதும் புகழ் வெளிச் சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தேவைய ற்றதை செய்து கொண்டிருக்க எனக்கு பிடிக்க வில்லை’’ என்று கூறும் ஷமிதா தொடர்ந்து...
‘‘சினிமாவில் நல்ல வாய்ப்புக ளுக்காக காத்திருந்து காத்திருந்து காலம் ஓடியதால், புதிதாக ஒன்றைக் கற்கலாம் என்று நான் முடிவெடு த்தேன். அப்படித் தான் இன்டீரியர் டெக்கரேஷன் பக்கம் நான் வந்தேன். அதில் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன.
உடனே, நான் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக மக்கள் நினைத்து விட்டார்கள். ஆனால் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நான் நடிப்பதற்கு ஆர்வமாகவே உள்ளேன். நடிப்பு தான் எனது முதல் காதல். அது என்றுமே மாறாது’’ என்று அடித்துச் சொல்கிறார், ஷமிதா ஷெட்டி.