ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் இடம்: முதல்வர் கடிதம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழகத்துக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்: ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு இந்த ஆண்டு 15,032 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆனால், மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி, இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 2,585 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்துள்ளது.

ஹஜ் பயணம் 2015-இன் வழிகாட்டு விதிமுறைகளின்படி முன்பதிவு அடிப்படையில் 1,699 பேரும், பொதுப்பிரிவின் கீழ் 886 பேரும் தேர்ந்து எடுக்கப்பட் டுள்ளனர்.

ஹஜ் பயணத்து க்காக விண்ணப்பித்த இதர 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடைந் துள்ளனர். கடந்த காலங்களில் மத்திய அரசு, ஒதுக்கீட்டு எண்ணிக்கையையும் கடந்து கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்தது.

அதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அதிகமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். 2013-ஆம் ஆண்டில் 3,696 பேரும், 2014-ஆம் ஆண்டில் 2,858 பேரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

எனவே, தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல இந்த ஆண்டு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தருமாறு, வெளியுறவுத் துறை அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்
Tags:
Privacy and cookie settings