மிஷ்கின் பட தொடக்க விழாவுக்கு இடம் கொடுத்த நடிகர் !

இயக்குநர் மிஷ்கினின் லோன்உல்ப் நிறுவனம் தயாரிப்பில் அவரிடம் உதவியா ளராக இருந்த ஆதித்யன் இயக்கத்தில் தொடங்கப் பட்டிருக் கும் படம் சவரக்கத்தி.
 
இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ராமும் நாயகியாக பூர்ணாவும் நடிக்கி றார்கள். படத்தைத் தயாரிப்பதோடு படத்தின் கதையை எழுதி வில்ல னாகவும் நடிக்க விருக்கிறார் மிஷ்கின்.

இந்தப்படத்தின் தொடக்கவிழா நடிகர் செல்வாவின் வீட்டில் நடந்திருக்கிறது. மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தி ருந்தார் செல்வா. 

அதற்காக மிஷ்கின் தயாரிக்கும் படத்தின் தொடக்க விழாவைத் தன் வீட்டில் நடத்தியி ருக்கிறார். பொது இடத்தில் நிகழ்ச்சியை நடத்தாமல் வீட்டிலேயே நடத்த என்ன காரணம்?

அதே நாள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ் வநாதனின் இறுதி அஞ்சலி நடந்தது. அதை யொட்டி தமிழகம் முழுவதும் படப் பிடிப்புகள் அன்று ஒரு நாள் ரத்து செய்யப் பட்டது.

இருப்பினும் முன்னரே நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருந்த மிஷ்கின், பொது இடங்களில் வைக்க வேண்டாம் என்றும் அதனால் தான் செல்வா வீட்டிலேயே நிகழ்ச்சியை நடத்தியதாகவும் சொல்லப் படுகிறது.

முகமூடி படத்தில் நடிக்க வைத்து, செல்வா நன்கு பேசப்பட்ட தால் அதற்கு காரணமான மிஷ்கினுக்கு நன்றிக்கடன் செய்யும் விதமாக தன் வீட்டிலேயே தொடக்க விழாவை நடத்தியதாகவும் சொல்லப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings