புகாரை வாங்க மறுத்த பொலிஸார்.. அபிசேம் செய்த மக்கள் !

ஒடிசாவில் புகாரை வாங்க மறுத்த பொலிஸாரை, குடிசை வாழ் மக்கள் தாக்கி சாக்கடையில் புரட்டி எடுத்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் லக்‌ஷ்மிசாகர் பகுதியில் அமைந்துள்ள ஹால்டிபடா குடிசைப் பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் ஜெனா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது.

சந்தோஷ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் சந்தோஷ் மீது லக்‌ஷ்மிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அளித்த புகாரை பொலிசார் எடுத்துக் கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை சூறையாடியதோடு, காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் உட்பட அங்கிருந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் அவர்களை அருகிலிருந்த சாக்கடையில் தள்ளி புரட்டி எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings