எல்லையில் அத்து மீறினால் தகுந்த பதிலடி கொடுப்போம்.. ராஜ்நாத் சிங் !

கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் வந்த ராஜ்நாத் சிங் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.
 
அப்போது அவர், "எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்றார்.

மோடி - ஷெரீப் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு வலுப்பெற வேண்டும் என்ற முயற்சியில்தான் பிரதமர் ஈடுபட்டாரே தவிர பாகிஸ்தானிடம் அவர் ஒன்றும் கையேந்தி நிற்கவில்லை" என்றார்.

வியாபம் ஊழல் பற்றி கூறும்போது, "வியாபம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்படுகின்றனர். சிவராஜ் சவுகான் தலைமையிலான அரசு இவ்விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறது" எனக் கூறினார்.
Tags:
Privacy and cookie settings