ஸ்மார்ட் போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான் எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும் சேர்ந்தி ருக்கிறது.
உலகிலேயே மிகவும் எரிச்சலுட்ட க்கூடிய துயிலெ ழுப்பும் செயலி என இது தன்னை வர்ணித்துக் கொள்கிறது.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெ ழுப்பும் நேரத்துக்குச் சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றது தான்.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெ ழுப்பும் நேரத்துக்குச் சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றது தான்.
ஆனால் இது ஒலிக்கத் தொடங்கிய பின் இதைச் சாதார ணமாக நிறுத்தி விட முடியாது. போனில் ஒரு ஒளிப் படத்தை எடுத்துப் பதிவேற்றிய பிறகுதான் இது மெளனமாகும். அதுவும் எப்படி தெரியுமா?
அலாரம் அமைக்கும்போது நீங்கள் தேர்வு செய்து ஒளிப் படமாக சமர்ப்பித்த இடத்துக்குச் சென்று படமெடு த்தால் தான் இதை நிறுத்த முடியும். அது வரை கத்திக் கொண்டே இருக்கும்.
அதனால் அது தன்னை எரிச்ச லூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்து விட்டு அதை விடப் பொறுப்பாக அதை அணைத்து விட்டு தூங்கி விடுபவர்களு க்காக உருவாக்கப் பட்டுள்ளது.