வருமான வரி தாக்கல் செய்ய புதிய படிவம் அறிமுகம்

வருமான வரி தாக்கல் கணக்கு விவரங்களை தணிக்கை செய்யவேண்டாம் என்று குறிப்பிடுபவர்களுக்கான காலக்கெடு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
கணக்கு விவரங்களை சட்டப்பூர்வமாக தணிக்கை செய்யவேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

சம்பளம், வீடுகள் மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் பிற வருமானங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ‘ஐ.டி.ஆர். 2 ஏ’ என்ற எளிமைப்படுத்தப்பட்ட புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்கள், வருமான வரி கணக்கு தாக்கலின்போது கூடுதலாக செலுத்திய தொகையை திரும்ப பெற விண்ணப்பிப்பவர்கள் மற்றும் வணிக மற்றும் தொழில் ரீதியாக வருமானம் பெறுபவர்கள் மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும்.

வரி செலுத்துபவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அலுவலகம் தொடர்பான விவரங்களை (www.tnincometax.gov.in) வருமான வரி இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை வருமான வரித்துறை அலுவலகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings