சிறுவனின் கழுத்தறுத்து கொன்ற இந்துத்துவ பயங்கரவாதி !

பட்டப்பகலில், 3 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவனைக் கொடூரமாக கழுத்தறுத்து படுகொலை செய்த பயங்கரவாதியைப் பொதுமக்கள் சேர்ந்து அடித்து உதைத்து காவல் துறையில் சேர்த்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.


கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கன்னன்காட் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். ஆட்டோ ஓட்டுநரான அப்பாஸ் அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர தொண்டர்.

அப்பகுதியில் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரிடையே நீண்டகாலமாக பிரச்சனைகள் இருந்து வருகிறது

இந்நிலையில், அப்பாஸின் மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது மகன் முகம்மது பயஸ் வழக்கம் போல தனது நண்பர்கள் மற்றும் சகோதரர் களுடன் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது,

பள்ளிக் குழந்தைகள் முன்னிலையில் கழுத்தறுத்து படுகொலை செய்யப் பட்டான். அவர்கள் பள்ளி சென்று கொண்டிருக்கும்போது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த விஜயகுமார் என்ற பயங்கரவாதி

திடீரென அவர்களிடையே புகுந்து சிறுவன் முஹம்மது பயஸைப் பிடித்துக்கொண்டு கையில் வைத்திருந்த கத்தியால் வீசியுள்ளான்.

இதனால் பயந்துபோன சிறுவர்கள் சிதறி ஓடினர். அதன் பின்னர் சிறுவன் முஹம்மதைச் சாலையில் கிடத்தி நிதானமாக கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தான்.

இதற்கிடையில் சிதறி ஓடிய சிறுவர்கள் எழுப்பிய அபயக்குரலைக் கேட்டு அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், தப்பி ஓடமுயன்ற விஜயகுமாரை விரட்டிச் சென்று பிடித்து அடித்து உதைத்து பக்கத்திலுள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவன் முஹம்மதின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, பயங்கரவாதி விஜயகுமாரைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்குக் காவல்துறையினரிடம், "முந்தைய தம் மீதான இரு வழக்குகள் தொடர்பான விவரங்களைத் தன்னுடைய புகைப்படத்துடன் ஊடகங்களுக்கு வழங்கிய பக்கத்து வீட்டுக்காரனான

அப்பாஸ் மீது எனக்கிருந்த முன் விரோதம் காரணமாக சந்தர்ப்பம் பார்த்திருந்து அவன் மகனைக் கொன்று பழிதீர்த்துக்கொண்டதாக" பயங்கரவாதி வியஜகுமார் வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறை கூறியுள்ளது.

ஆனால், "கொலை நடந்த தினத்துக்கு முந்தைய தினம் காலையும் மாலையும் விஜயகுமாருடன் மேலும் இருவர் முஹம்மது படிக்கும் பள்ளிக்கூடத்தின் அருகே நடமாடியதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, குற்றவாளி அளித்துள்ள வாக்குமூலத்தைக் காவல்துறை முழுமையாக நம்பவில்லை. இக்கொலைக்குக் காரணம் மனநிலை பாதிப்பா, முன் விரோதமா

அல்லது வேறு யாராவது விஜயகுமாரைக் கொலை செய்யப் பயன்படுத்தியுள்ளனரா என்ற வெவ்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொலையாளி விஜயகுமார் அப்பகுதி பாரதீய ஜனதா கட்சியின் தீவிர தொண்டன் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதனைப் பாரதீய ஜனதா கட்சியினர் மறுத்துள்ளனர்.

இதற்கு முன்னரும் ரயிலுக்குப் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு, ஷெட்டிற்குத் தீவைத்த வழக்குகளில் விஜயகுமார் கைது செய்யப்பட்டிருந்தான்.

அப்போது, விஜயகுமார் மனநிலை குன்றியவன் எனக் கூறி சங்பரிவார அமைப்புகள் காவல்நிலையத்திலிருந்து அவனை விடுவித்து தப்புவிக்க வைத்துள்ளனர் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது இந்தக் கொடூர சம்பவத்திலும், பயங்கரவாதி விஜயகுமார் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் காவல்துறையினரே கூறுவதாகவும் ஆனால், இது மிகத் தெளிவான திட்டமிட்டப் படுகொலை எனவும் அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவன் செய்த குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மனநிலை பாதிக்கப்பட்டவன், கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் தொந்தரவு செய்யவேண்டும்;

ஆனால், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த குழந்தைகளில் அப்பாஸின் மகனை மட்டும் தேர்வு செய்து கொலை செய்தது எப்படி?. தோட்டத்தில் பராமரிப்பு பணிகள்,

மூன்று சக்கர வாகனம் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் விஜயகுமார் எப்படி மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்க முடியும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அது மட்டுமன்றி, முஹம்மதைக் கொலை செய்த பின்னர் அதற்குப் பயன்படுத்திய கத்தியை அருகிலுள்ள பம்புசெட்டினுள் மறைத்து வைத்துவிட்டு தப்பியோடி யுள்ளான்.

மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கு கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைக்கவேண்டுமென்பது மட்டும் தெளிவாக தெரிந்ததா எனவும் அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

இதற்கிடையில், "இதற்கு முன்னர் நடந்த இரு வழக்குகளிலும் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று விடுவித்தது தவறு. அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது.

சிறு குழந்தையின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ள விஜயகுமாரை மனநிலை பாதிக்கப்பட்டவன் எனக் கூறி விடுவிக்கக்கூடாது. அவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என மாவட்ட பாஜக செயலாளர் வழக்கறிஞர் சிறீகாந்த் கூறியுள்ளார்.

பட்டப்பகலில் பள்ளி சிறுவர்களின் முன்னிலையிலேயே 8 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இப்பயங்கரம் கேரளாவில் மக்களிடையே பெரும் பரபரப்பையும் பாரதீய ஜனதா மற்றும் சங்கபரிவார அமைப்புகளுக்கு எதிராக கடும் கோப அலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூர சம்பவத்துக்கு எதிராக கடையடைப்பு நடத்த கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Tags:
Privacy and cookie settings