சாலை விபத்து மற்றும் இடி தாக்கி இறந்தவர்கள் குடும்பங் களுக்கு நிவாரண உதவி வழங்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
சாலை விபத்து
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் குருக்கள் பட்டி கிராம பிரதான சாலையில், கடந்த மே மாதம் 5-ந்தேதி அன்று சங்கரன் கோவிலிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிரே வந்த வேன் மீது மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் சொக்கன் நாதன் புதூரைச் சேர்ந்த சோலைமலை என்பவரின் மனைவி செல்வி, நடராஜன் என்பவரின் மனைவி செல்வ வடிவு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி சாந்தி,
அவருடைய குழந்தை கார்த்திகேயன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாச முத்திரம் வட்டம், வடமலை சமுத்திரம், அகஸ்தியர் புரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் ஞானசேகர் ஆகியோர்
பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
ரூ.3 லட்சம் நிதி
இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங் களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் 4 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்த மடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.
இடிதாக்கி விபத்து
திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் குலையனேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கையா மனைவி குருவம்மாள் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி இடிமின்னல் தாக்கி இறந்தார். அதேபோல் திருவாரூர் மாவட்டம்,
திருத்துறைப்பூண்டி வட்டம், எழிலூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் வெள்ளைச்சாமி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் போத்திரமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் மாயவேல்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், ஏ.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பச்சைமால் என்பவரின் மனைவி இந்திரா, தேவராஜ் என்பவரின் மனைவி அனுராதா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், வத்தனாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி கலைமணி கடந்த மே மாதம் 3-ந்தேதி இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
ரூ.1 லட்சம் நிதி உதவி
இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.