பா.ஜனதாவை மீண்டும் இந்திய மண்ணில் அனுமதிக்கமாட்டோம்: சரத் யாதவ்

பிரதமர் மோடி வாக்குறுதிகளை மீறி விட்டார். மதசார்பற்ற கூட்டணி மீண்டும் பா.ஜனதாவை இந்த மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று ஐக்கிய ஜனதா தள தேசிய தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமூக பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். இதில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் சரத் யாதவ் கலந்து கொண்டார்.

அதன்பின் சரத்யாதவ் கூறியதாவது:-


சமூக பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நசுக்க முயற்சி செய்வதன் மூலமாகவும், பல்வேறு அமைதிகளை சீர்குலைப்பதன் மூலமும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மோடி மீறுகிறார். இந்த சூழ்நிலையால் நாடு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஆகவே, நாங்கள் இந்திய மண்ணில் பா.ஜனதாவை திரும்ப விடமாட்டோம்.
பா.ஜனதா கொடியில் உள்ள தாமரை மண்ணில் முளைக்கும். ஆகவே, காவிக்கட்சியான பா.ஜனதா நாட்டையே மண்ணாக்குவதற்கு முயற்சி செய்து வருகிறது. பின்னர் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது.

பா.ஜனதாவில் விளையாட்டு முடிவதற்கு நேரம் தொடங்கிவிட்டது. மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி அவர்களை தோற்கடிக்கும். இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
Tags:
Privacy and cookie settings