மூளை அறுவை சிகிச்சையின் போது கிடார் வாசித்த நோயாளி !

பிரேசிலில் நோயாளி ஒருவர் தனக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது கிடார் வாசித்து அசத்தியுள்ளார்.
மூளை அறுவை சிகிச்சையின் போது கிடார் வாசித்த நோயாளி !
பிரேசிலை சேர்ந்த அந்தோனி குல்காம்ப் (33) என்வருக்கு மூளையில் சிறிய கட்டி ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். 

எனவே அந்தோனி தனது அறுவை சிகிச்சையின் போது இசைக்கருவியை வாசிக்க அனுமதி கோரியுள்ளார். மருத்துவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து அவர் தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது கிடார் கருவியை வாசித்துள்ளார். 

அதில் தனது மகனுக்காக தான் எழுதிய பாடல்களையும், கிளாசிக்கல் பாடல்களையும் வாசித்துள்ளார்.
மூளை அறுவை சிகிச்சையின் போது கிடார் வாசித்த நோயாளி !
இது குறித்து அந்தோனி கூறுகையில், நான் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்றை வாசித்த பொழுது, திரும்பவும் வாசிக்கும் படி கேட்டுக் கொண்டனர். 

மீண்டும் வாசித்தவுடன் அவர்கள் மிகவும் ரசித்து கேட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings