கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவிகளுக்கு ஜீன்ஸ், குட்டை மேலாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு நடக்காவு பகுதியில், முஸ்லிம் கல்வி நிறுவனம் சார்பில் பெண்கள் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு வரும் முதலாமாண்டு மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ், குட்டை மேலாடை, லெக்கின்ஸ் அணிவதற்கு இந்தாண்டு முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வரும் ஜூலை 8 ஆம் தேதில் முதல் மாணவிகள் சல்வார், சுடிதார் பாட்டம் மற்றும் ஓவர்கோட் அணிந்துவர வேண்டும். முஸ்லிம் மாணவிகள் தலையில் பர்தா அணிந்து வரலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவிக்கையில்," மாணவிகள் சிலர் இறுக்கமான ஜீன்ஸ், குட்டை மேலாடை மற்றும் லெக்கின்ஸ் அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர்.
இதனை அனுமதிக்க முடியாது. அவற்றை தடுக்கும் வகையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு சீனியர் மாணவிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
சல்வாரின் மீது அணியும் ஷாலை, ஓவர்கோட் மீது அணிந்து கொள்ளலாம். இதனால் 50 சதவீத மாணவியர், ஒரே மாதிரியான உடையமைப்பில் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு மாணவிகளின் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதே போல கொல்கத்தாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் குட்டைப் பாவாடை அணிந்து கல்லூரிக்குள் வர கூடாது என்றும்,சல்வார் கமீஸ் அல்லது சேலைகளை மாணவிகள் அணிந்து வர வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கல்வி கற்கும் இடத்தில் அதற்கேற்ற தோற்றத்தில் மாணவிகள் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.