கால்சியம் என்னும் தாதுச்சத்து, பற்கள் மற்றும் எலும்புகளை வலுவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்து, தசை சுருக்கம், ஹார்மோன் உற்பத்தி, மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது.
ஆனால் இந்த கால்சியம் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலின் சமநிலையை பாதித்து, உடலின் செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படும்.
இத்தகைய நிலையைத் தான் ஹைப்பர் கால்சீமியா என்று சொல்வார்கள். பொதுவாக உடலில் கால்சியத்தின் அளவு 9-11 mg/dl இருக்கும்.
ஆனால் இதற்கு அதிகமாக இரத்தத்தில் கால்சியத்தின் அளவு இருந்தால் அது ஹைப்பர் கால்சீமியா ஆகும்.
இத்தகைய ஹைப்பர் கால்சீமியாவின் ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்து, முற்றும். பெரும்பாலும் லேசாக இருக்கும் ஹைப்பர் கால்சீமியா எந்த ஒரு அறிகுறி களையும் வெளிப் படுத்தாது.
ஆனால் இந்த நோயானது முற்றிய நிலையில், அதாவது அதிகப் படியான கால்சியத்தால், உடலின் ஏதேனும் ஓர் உறுப்பானது பாதிக்கப் பட்டிருந்தால்,
அது ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அத்தகைய அறிகுறிகள் என்ன வென்று பார்ப்போமா!
அசாதாரண இதயத் துடிப்பு
அசாதாரண இதயத் துடிப்பு
இந்த பிரச்சனை இருந்தால், இதய த்துடிப்புகளில் சில மாற்றங்கள் தெரியும். அதுவும் ஈசிஜி எடுக்கும் போது, அது நிலையான அளவை காண்பிக்காமல், மாற்றங்களை ஏற்படுத்தும்.
வாந்தி
தேவை யில்லாமல் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவை அதிகம் இருந்தால், அது ஹைப்பர் கால்சீமியா விற்கான அறிகுறியாகும்.
பாலியூரியா (Polyuria)
பாலியூரியா என்பது அளவுக்கு அதிகமான அளவில் சிறுநீரை கழித்தல் ஆகும். அதிலும் உடலில் கால்சியம் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இறுதியில் பாலியூரியாவை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல்
அதிகப் படியாக சிறுநீர் வெளியேறி னால், அது உடலில் வறட்சியை உண்டாக்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
சிறுநீரகக் கற்கள்
ஹைப்பர் கால்சீமியா வானது முற்றிய நிலையில் இருந்தால், உடலில் இருக்கும் கால்சியமானது சிறுநீரகக் கற்களை உண்டாக்கி, சிறுநீரகத்தில் அடைப்பை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கும். மேலும் இந்த நிலையில் கடுமையான வலியானது இருக்கும்.
அதிகப்படியான தாகம்
பாலியூரியா வினால் நீர்ச்சத்தானது உடலில் இருந்து வெளியேறுவ தால், அதிகப்படியான தாகம் ஏற்படும். மேலும் நீர்ச்சத்து குறைவதால், சரும வறட்சி மற்றும் உதடு வறட்சி போன்றவையும் ஏற்படும்.
அல்சர்
உடலில் கால்சியம் அதிகம் இருந்தால், இரைப் பையில் சுரக்கும் அமிலத்தின் அளவானது அதிகரித்து, அது அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணை ஏற்படும்.
சோர்வு மற்றும் தசை பலவீனம்
சோர்வு, தசை பலவீனம் போன்றவை ஹைப்பர் கால்சீமியா நோயாளிகளுக்கு இருக்கும். ஏனெனில் அதிகமான கால்சியம் உடலில் இருந்தால், அவை நரம்பு செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும்.
எலும்பு பிரச்சனைகள்
கால்சியம் அளவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கி யத்துடன் வலுவோடு இருக்கும்.
ஆனால் அதுவே அதிகமாக இருந்தால், அவை எலும்பு முறிவு, எலும்பைச் சுற்றியுள்ள தசைகளில் வீக்கங்கள், முதுகெலும் புகளில் வலி மற்றும் பிடிப்பு போன்ற வற்றை ஏற்படுத்தும்.
கோமா
உடலில் கால்சியம் அளவுக்கு அதிகமாக, அதுவும் 15-16 mg/dl இருந்தால், இறுதியில் கோமா என்னும் ஆழ்மயக் கத்தில் ஆழ்த்திவிடும்.