அப்துல்கலாமிற்கு கூகுள் முகப்பு பக்கத்தில் இரங்கல்!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நேற்று முன்தினம் (27ஆம் தேதி) இரவு காலமானார். இவரின் திடீர் இழப்பை மக்களால் ஏற்று கொள்ள முடியாமல்,

அவரவர்களது துக்கத்தை முகநூல், டுவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களிலும் இரங்கல் பதிவாக தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் அனைவரது உள்ளங்களிலும் நிறைந்து வியாபித்தவராய் திகழும் அப்துல் கலாமிற்கு உலகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும், மாணவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கூகுளும் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. உலகின் மிகப் பெரிய தேடல் பொறியான கூகுள், தனது முகப்பு பக்கத்தில் கருப்பு ரிப்பனை இடம் பெறச் செய்திருக்கிறது. 

முகப்பு பக்கத்தின் கீழாக அமைந்துள்ள கருப்பு ரிப்பன், 'டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக' என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் சுட்டிக் காட்டுகின்றது.
கலாம், நேற்று முன்தினம் தனக்கு எப்போதும் பிடித்த மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். 
கலாம் தனது கடைசி மூச்சு வரை மாணவர்களின் மீது பேரன்பு கொண்டிருந்தார் என்பதற்கு இதுதான் உதாரணம்! 
Tags:
Privacy and cookie settings