மின் கம்பங்களில் ஏறும் மின் ஊழியர்களுக்கு வசதியாக, மாடிப்படியில் ஏறுவதுபோல் செயல்படும் ‘லிப்டிங் சப்பலை’ மேலூர் வாலிபர் உருவாக்கியுள்ளார்.
மதுரை, மேலூரை சேர்ந்தவர் செந்தில் (35). அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர் தனது தந்தையின் இன்ஜினியரிங் லேத்தில் வேலை செய்கிறார். புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்பது செந்திலின் கனவு. முதலில் உளுந்து விதைக்கும் இயந்திரம் கண்டுபிடித்தார்.
பிறகு பரோட்டா வீசும் இயந்திரம் கண்டுபிடித்தார். தற்போது செருப்பில் இரும்பு ராடுகளை பொருத்தி ‘லிப்டிங் சப்பல்’ என்ற செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் உதவியுடன் மின்கம் பங்களில் எளிதாக ஏறமுடிகிறது.
செந்தில் கூறுகையில், ‘‘மின்கம் பங்களில் ஏறும் மின் ஊழியர்கள் காலில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஏறுகின்றனர். இந்த லிப்டிங் சப்பலை காலில் அணிந்து கொண்டு மின்கம்பத்தில், சாதாரண படிகளில் ஏறுவது போல சுலபமாக ஏறமுடியும்.
பாதுகாப்புடன் பிடிமானமும் நன்றாக உள்ளதால், இதில் ஆபத்து இல்லை. தரமான செருப்பு மற்றும் இரும்பு ராடுகளை கொண்டு இதை உருவாக்க ரூ.1,200 மட்டுமே செலவாகும்.
மின் ஊழியர்கள் சிலர் இதை அணிந்து மின்கம்பத்தில் ஏறி பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக கூறினர். மின்வாரியம் இதை தங்கள் ஊழியர்களுக்கு வாங்கி கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்,’’ என்றார்.
மின்ஊழியர்கள் கூறுகை யில், ‘இந்த சப்பல் நன்றாக உள்ளது. எங்களுக்கு கம்பத்தில் ஏறிய சோர்வு ஏற்படவில்லை’ என்றனர். லிப்டிங் சப்பலை உருவாக்கிய செந்திலிடம் பேச 9944437098 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.