இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி.28 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுண் தொடங்கியுள்ளது.
இஸ்ரோ வணிக ரீதியாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த, ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, பிரிட்டன் நாட்டின், டிராஸ்டர் மேனேஜ்மெண்ட் கன்சல்டேஷன் என்ற, 1,440 கிலோ எடை கொண்ட, 3 செயற்கை கோள்களும், அமெரிக்காவை சேர்ந்த, சரே நிறுவனத்தின், மைக்ரோ மற்றும் நானோ என, 2 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

வரும் 10ம் தேதி இரவு, 9:58 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி - 28 ராக்கெட் மூலம் அவை அனைத்தும் விண்ணில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான, 62.50 மணி நேர கவுன்டவுண் இன்று காலை, 7:30 மணிக்கு துவங்கியுள்ளது.
பூமியின், இயற்கை வளங்கள், மண்வளம், நகர்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆய்வு பணிகளை, இந்த செயற்கை கோள்கள் செய்யும். மேலும், இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.