யாகூப் மேமனை நாக்பூர் சிறையில் மனைவி, மகள் சந்திப்பு!

மும்பை பயங்கர தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை அவரது குடும்பத்தினர் நாக்பூர் சிறைக்கு சென்று சந்தித்தனர்.கடந்த 1993 மார்ச் 12 ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
இதில் 254 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இது தொடர்பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டாலும் முக்கிய குற்றவாளி யாகூப்மேமன் ( வயது 53 ).

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப்புக்கு மும்பை தடா கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் செய்த அப்பீல்கள் தள்ளுபடியானது. ஜனாதிபதிக்கு அளித்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து தமது சிறைவாசத்தை கருதி தூக்கை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட் , இன்று தள்ளுபடி செய்தது. இதனையடுத்து யாகூப் தூக்கு வரும் 30 ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளார்.

இந்நிலையில் யாகூப் மேமனை அவர்களது உறவினர்கள் நாக்பூர் சிறையில் சந்தித்து வருகின்றனர். திங்கட்கிழமை அவரது மருமகன் சென்று சந்தித்தார். இந்நிலையில் யாகூப்பின் மனைவி ரகீன், அவரது மகள் மற்றும் சகோதரிகள் இன்று நாக்பூர் சிறைக்கு சென்று சந்தித்தனர்.

யாகூப் தூக்கலிடப்படுவடுவதை யொட்டி சிறையை சுற்றிலும் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளன. ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கசாப்பை போட்ட குழு வருகிறது: 

நாக்பூர் சிறையில் தூக்கு போடும் நபர்கள் பெரிய அனுபசாலிகள் இல்லை என்பதால் , சிறப்புக்குழுவுக்கு சிறை நிர்வாகம் கோரியுள்ளது.

பார்லி., தாக்குதலில் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி கசாப் கடந்த 2012 எரவாடி சிறையில் தூக்கிலிடப்பட்டான். இவனை தூக்கு போட்ட குழுவினரை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டள்ளது. யாகூப்பின் உடல் எடை , உயரம் கொண்ட மரப்பொம்மைகள் தயாரித்து, அதனை தூக்கலிட்டு டிரையல் பார்த்து வருகின்றனர் சிறை அதிகாரிகள்.

இன்று டாக்டர்கள் சோதனை:  

இன்று காலையில் யாகூப்பை டாக்டர்கள் குழுவினர் சந்தித்தனர். அவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சற்று வாடிய நிலையில் அவர் இருப்பதாக தெரிகிறது .
Tags:
Privacy and cookie settings